பள்ளி துதிப்பாடல்

 

     1924 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 19 ம் நாள் சிருங்கேரி ஆதி சங்கரர் மடாதிபதி, “ஸ்ரீசங்கர சேகர பாரதி சுவாமிகள்” இப்பள்ளியை ஆசிர்வதித்து அருளாசியாக இப்பள்ளிக்கு ஒரு ஸ்லோகத்தை வழங்கினார்கள்.
    இந்த ஸ்லோகன் பள்ளியில் தினமும் வழிபாட்டின் பொழுது மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பாடப்படுகிறது.

துதிப்பாடல்

ஸ்ரீ சங்கர வித்யாசாலாம்
சங்கர குருராட் ஸதாபிவர்த்தயது
பங்கவிஹீனாம் கர்த்தும்
கைங்கர்யம் திசது ஸததமஸ்மாகம்
ஸ்ரீமத் தேசிக சக்கரவர்த்யினி சமபி
அவ்யாத் கிருபாவாரிதி:
சாலஸ்தான் விதுஷ: தைதவ
நிதிலான் வித்யார்த்தினோபீஷ்டத:
தர்மஸக்த மதீன் அதர்ம விழுகான்
மைத்திரியா திஸத்வாஸனா
யுக்தானா தனுதாம்
மஹேச சரணாம் போஜாத ப்ருங்காயிதான்.

பொருள் :

                ஸ்ரீசங்கர வித்யாசாலாவானது ஸ்ரீலோககுரு சங்கரரின் குரு ஆசிர்வாதம் எப்பொழுதும் மழை போல பரிபூரணமாக உள்ளது. இதன் கர்த்தா ( அதிகாரிகள் ) வின் கைங்கர்யம் ( பணிகள் ) பங்கமில்லாமல், தாழ்வு அடையாமல் நூற்றாண்டு காலம், ஸ்ரீதேசிக பகவத் பாதாளின் கிருபையினால் காலச் சக்கரத்தாலும் அழிவில்லாமல் இருக்கக் கடவது.

             நல்ல நிலையான புகழுடன் நேர்மையான தவ நிலையான கல்விச் செல்வத்தினாலும் மிகச் சிறந்த கல்வியாளர்களை மேன்மையடையச் செய்வதினாலும், தர்மத்துடனும் நல்ல பழக்க வழக்கங்களுடனும், அதர்ம வழியில் நடக்காமலும் தர்மம் வழுவாமலும், நல்ல குணத்தை நிலையாகக் கொண்டவரும், மகேஷருக்கு இணையான, போகராஜனைப் போன்று மக்களை நேசிப்பவருமான ஸ்ரீமகாபகவத்பாதாளின் பாதங்களை சரண் புகுவோம்.