நேற்று

கொடுமுடி என்றாலே நமது நினைவிற்கு வருவது,

  • அருள்மிகு மகுடேஸ்வரர் கோவில் மற்றும்
  • SSV மேல்நிலைப்பள்ளி,

                                      கொடுமுடி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்களின் நலன் கருதி 1910 ம் ஆண்டு துவங்கப்பட்டது. நல்ல தரமான கல்வியை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு வெற்றி பெறச் செய்வதே நமது பள்ளியின் நோக்கமாகும்.

நமது பள்ளி விவசாயம், கல்வி, மருத்துவம், பொறியியல், நீதி, காவல், கலை, அறிவியல், விளையாட்டு மற்றும் அரசியல் துறைகளில் மிகச் சிறந்த சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது.

காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு காலகட்டங்களில் நமது பள்ளியின் கட்டிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 32 வகுப்பறைகள் கட்டப்பட்டிருந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், உயர்நிலை அறிவியல் ஆய்வகம் போன்ற ஆய்வக வசதிகள் தனித்தனியாக செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் குடிநீர் வசதிக்காக இரண்டு கிணறுகள் மற்றும் ஒரு ஆழ்துளைக்கிணறு இருக்கிறது. மேலும் மாணவ மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகள் தனித்தனியே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

மாணவர்களின் விளையாட்டுத்திறமையை ஊக்குவிப்பதற்காக வாலிபால், ஹேண்ட்பால், பேஸ்கட்பால், கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன் மற்றும் தடகளப் போட்டிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. பழைய கட்டிடங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் மேற்கூரைகள் ஓட்டு வில்லைகளினாலும், சிமென்ட் சீட்டுகளினாலும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சில கட்டிடங்களே தார்சு கட்டிடங்களாக இருந்தன். அரசின் புதிய விதிகளின் படி அனைத்துக் கட்டிடங்களும் தார்சு கட்டிடங்களாக மாற்றப்படவுள்ளது.